களக்காடு சத்தியவாகீசுவரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

களக்காடு சத்தியவாகீசுவரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏர்வாடி,
களக்காடு சத்தியவாகீசுவரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சத்தியவாகீசுவரர் கோவில்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் களக்காடு சத்தியவாகீசுவரர் கோமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது.
தேரோட்டம்
8-ம் நாளான வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2 மணிக்கு சுவாமி நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. 9-ம் நாளான 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 18-ந் தேதி காலையில் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






