உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி


உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி
x
தினத்தந்தி 10 May 2019 3:00 AM IST (Updated: 10 May 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூரை அடுத்த அனமந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (36). இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். 2-வது மகள் நளினி (8) 2-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3-ம் வகுப்பு சேருவதாக இருந்தார். நேற்று மதியம் நளினி அருகில் உள்ள கடைக்கு சென்றாள்.

அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலைக்கு கம்பி ஏற்றி கொண்டு வந்த லாரி நளினி மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி நளினி பரிதாபமாக உயிரிழந்தாள். டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவரை உடனடியாக கைது செய்வோம் என்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நளினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story