சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி கணவர் படுகாயம்


சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 10 May 2019 3:45 AM IST (Updated: 10 May 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

போளூர், 

போளூரை அடுத்த மட்டப்பிறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுழந்தை (வயது 90). இவரது மனைவி கனகவள்ளி (80). நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

இரவு 9 மணியளவில் வீட்டின் ஒரு பக்க மண்சுவர் திடீரென இடிந்து அவர்கள் இருவர் மீதும் விழுந்தது. இதில் 2 பேரின் கால்கள் நசுங்கின. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் சின்னகுழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story