“சிறந்த சட்டமன்ற தொகுதியாக ஓட்டப்பிடாரத்தை மாற்றுவேன்” தி.மு.க. வேட்பாளர் சண்முகையா உறுதி


“சிறந்த சட்டமன்ற தொகுதியாக ஓட்டப்பிடாரத்தை மாற்றுவேன்” தி.மு.க. வேட்பாளர் சண்முகையா உறுதி
x
தினத்தந்தி 10 May 2019 3:30 AM IST (Updated: 10 May 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

“ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவேன்“ என்று தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா உறுதி அளித்தார்.

தூத்துக்குடி, 

“ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவேன்“ என்று தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா உறுதி அளித்தார்.

பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையா நேற்று காலை ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஜம்புலிங்கபுரம், புதூர், கைலாசபுரம், சவரிமங்கலம், கொம்பாடி, தளவாய்புரம் ஆகிய கிராமங்களில் மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை தலைமையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

மாலையில் செவல்குளத்தில் இருந்து, கருணாநிதி எம்.எல்.ஏ. தலைமையில் வேட்பாளர் சண்முகையா பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சங்கரராஜபுரம், பச்சைபெருமாள்புரம், ஓசநூத்து, குலசேகரநல்லூர், வடக்கு ஆரைக்குளம், தெற்கு ஆரைக்குளம், கந்தசாமிபுரம், மேலபாண்டியாபுரம், பாறைகுட்டம் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் சண்முகையா கூறியதாவது:-

சிறந்த தொகுதி

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க உள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. பல கிராமங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன்மூலம் பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் உப்புத்தன்மை உடையதாக மாறி உள்ளது. இதன் காரணமாக பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கிராமங்களுக்கும் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்து பணிமனை அமைத்து அதன்மூலம் போக்குவரத்து வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் அரசு பஸ் வசதி செய்துதர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் சிறந்த சட்டமன்ற தொகுதியாக ஓட்டப்பிடாரம் தொகுதியை மாற்றிக் காட்டுவேன். இதனால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தில், தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story