மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி: முதல்-மந்திரி குமாரசாமியுடன் காங். எம்.எல்.ஏ. நாகேந்திரா திடீர் சந்திப்பு


மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி: முதல்-மந்திரி குமாரசாமியுடன் காங். எம்.எல்.ஏ. நாகேந்திரா திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 10 May 2019 4:30 AM IST (Updated: 10 May 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகேந்திரா எம்.எல்.ஏ. நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை திடீரென்று சந்தித்து பேசினார்.

பெங்களூரு, 

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகேந்திரா எம்.எல்.ஏ. நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை திடீரென்று சந்தித்து பேசினார்.

நாகேந்திரா எம்.எல்.ஏ.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி கூட்டணி ஆட்சி மீது அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக சொல்லப்படுகிறது.

அதுபோல் மந்திரி பதவி கிடைக்காததால் பல்லாரி புறநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நாகேந்திராவும் காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர், ரமேஷ் ஜார்கிகோளியுடன் சேர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியானது.

குமாரசாமியுடன் திடீர் சந்திப்பு

இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை நாகேந்திரா எம்.எல்.ஏ. திடீரென்று சந்தித்தார். அவர்கள் 2 பேரும் 15 நிமிடங்களுக்கும் மேலாக பேசினார்கள். அப்போது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது மற்றும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரும் முடிவை கைவிடும்படி நாகேந்திரா எம்.எல்.ஏ.விடம் குமாரசாமி கூறியதாக தெரிகிறது.

பின்னர் விதானசவுதாவில் இருந்து நாகேந்திரா எம்.எல்.ஏ. புறப்பட்டு சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் ஜார்கிகோளியை முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசி இருந்தார். இதனால் கூட்டணி ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரசில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
1 More update

Next Story