இயற்கை பேரிடர் பாதிப்புகளை தெரிந்து கொள்ள செல்போன் செயலி அறிமுகம் அரியலூர் கலெக்டர் தகவல்


இயற்கை பேரிடர் பாதிப்புகளை தெரிந்து கொள்ள செல்போன் செயலி அறிமுகம் அரியலூர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 May 2019 4:45 AM IST (Updated: 10 May 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை பேரிடர் பாதிப்புகளை தெரிந்து கொள்ள TNSMART என்ற செல்போன் செயலி அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி அறிமுகம் செய்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பை தெரிந்து கொள்ள வசதியாக புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலியின் பெயர் TN-S-M-A-RT. இதனை தங்கள் செல்போனில் உள்ள Go-o-g-le Pl-ay store&™ இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் அரியலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம், அதிக வெப்பம் மற்றும் புயல் ஆகிய பேரிடர் காலங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அறிக்கை அனுப்பப்படும். அதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியை அனைத்து துறை அரசு அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பேரிடர் தொடர்பான புகார்கள் மற்றும் புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர் சேதம் ஆகியவற்றை படம் எடுத்து பதிவேற்றம் செய்யும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. எனவே இந்த செயலியை மக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story