புதுவை வெங்கட்டா நகரில் மறுவாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் தேர்தல் துறை அதிகாரிகள் ஆய்வு
புதுச்சேரி வெங்கட்டா நகரில் மறுவாக்குப் பதிவுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது. இதில் வைத்திலிங்கம் (காங்கிரஸ்), டாக்டர் நாராயணசாமி (என்.ஆர்.காங்கிரஸ்), டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 18 பேர் போட்டியிட்டனர்.
அப்போது புதுவை காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகரில் உள்ள மின் கட்டண வசூல் மைய வாக்குச்சாவடி எண் 10-ல் வி.வி.பாட் எந்திரத்தில் உள்ள மாதிரி வாக்குகளை அழிக்காமல் வாக்குப்பதிவு நடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதையடுத்து புதிய எந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகாரில், காமராஜர் நகர் தொகுதியில் வெங்கட்டா நகர் மின் கட்டண வசூல் மைய வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த வாக்குச்சாவடியில் வருகிற 12-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அதன்படி வெங்கட்டா நகர் மின்துறை மின்கட்டண வசூல் மைய வாக்குச்சாவடியில் வருகிற 12-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 473 ஆண் வாக்காளர்கள், 479 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 952 பேர் உள்ளனர். மறுவாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் நிற்பதற்கு வசதியாக நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று தேர்தல் துறை அதிகாரிகள் வாக்குச்சாவடியில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், முருகவேல், பெரியகடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை அங்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் புதுவை போலீசார், துணை ராணுவ படையினருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story