மாவட்ட செய்திகள்

பண்ருட்டி அருகே, காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை + "||" + Near Panruti, Love married woman commits suicide

பண்ருட்டி அருகே, காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை

பண்ருட்டி அருகே, காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை
பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அருள்வேலன் (வயது 25). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரது மகள் சுபா(20). இவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 8 மாதத்தில் ஹர்சன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இ தனால் சுபா, மனமுடைந்தநிலையில் காணப்பட்டார்.

நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அவர், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சுபாவின் உலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று கடலூர் சப்-கலெக்டர் சரயூ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பரப்பாடி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை
பரப்பாடி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. சுசீந்திரம் அருகே, கடன் தொல்லையால் பெண் தற்கொலை
சுசீந்திரம் அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
3. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கவுரவ கொலை செய்ய திட்டம் - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாமியாா் புகார்
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கவுரவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக மாமியார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
4. குறிஞ்சிப்பாடி அருகே, 2 குழந்தைகளை எரித்துக்கொன்று தாய் தற்கொலை
குறிஞ்சிப்பாடி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் தனது 2 குழந்தைகளை எரித்துக்கொன்று, தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. சின்னசேலத்தில், விஷம் குடித்து பெண் தற்கொலை - தாயார் திட்டியதால் விபரீத முடிவு
சின்னசேலத்தில் தாயார் திட்டியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.