வெவ்வேறு இடங்களில் இளம்பெண்கள் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


வெவ்வேறு இடங்களில் இளம்பெண்கள் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 11 May 2019 3:45 AM IST (Updated: 11 May 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு இடங்களில் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ள குரும்பர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மேகலா (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மேகலா மனமுடைந்து விஷம் குடித்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மேகலா இறந்து விட்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 3 ஆண்டுகளுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து உதவி கலெக்டர் சரவணனும் விசாரணை நடத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள தாடிக்காரன்கொட்டாய் பக்கமுள்ள அகசிப்பள்ளியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி காயத்திரி (வயது 20). இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காயத்திரி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 1½ ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் உதவி கலெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story