தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் ஒப்புகை சீட்டு எண்ணப்படுகிறது


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் ஒப்புகை சீட்டு எண்ணப்படுகிறது
x
தினத்தந்தி 11 May 2019 3:00 AM IST (Updated: 11 May 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் ஒப்புகை சீட்டு எண்ணப்படுகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் ஒப்புகை சீட்டு எண்ணப்படுகிறது.

மாதிரி வாக்குப்பதிவு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலின்போது விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்த ஒரு வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மாதிரி வாக்குகளை அழிக்காமல், தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. பின்னர் இதனை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வாக்குச்சாவடியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலுக்கு 890 வாக்குகளும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு 838 வாக்குகளும் பதிவாகி இருந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒப்புகை சீட்டு

இந்த நிலையில் தேர்தல் ஆணையம், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல், அதிகாரிகள் தவறு செய்த 47 வாக்குச்சாவடிகளில், தேனி தொகுதியில் உள்ள 3 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவை நடத்துகிறது. மற்ற 44 வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை கணக்கில் எடுத்து கொள்ளாமல், அவற்றின் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் என்று அறிவித்து உள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள விளாத்திகுளம் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டை எண்ணுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் மாவட்ட தேர்தல் அலுவலகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Next Story