தென்காசியில் பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
தென்காசியில் நேற்று பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தென்காசி,
தென்காசியில் நேற்று பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
பள்ளிக்கூட வாகனங்களில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், ஆண்டுதோறும் பள்ளிக்கூட கோடை விடுமுறையில் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தென்காசியில் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது வாகனங்களில் படிக்கட்டுகளின் உயரம், தீயணைப்பான் கருவி, அவசர வழி, முதலுதவி பெட்டி போன்றவை வைக்கப்பட்டு உள்ளதா?, பள்ளியின் பெயர், தொலைபேசி எண், போலீஸ் நிலையம், வட்டார போக்குவத்து அலுவலகத்தின் தொலைபேசி எண் போன்றவை எழுதப்பட்டு உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு விதிகள் வாகனங்களில் கடைபிடிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக்கூட வேன் மற்றும் பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யம்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story