பாளையங்கோட்டையில் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகளுக்கு தேர்வு
பாளையங்கோட்டையில் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடந்தது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடந்தது.
விளையாட்டு விடுதிகள்
தமிழகத்தில் மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், நெய்வேலி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான அரசு விளையாட்டு விடுதிகள் உள்ளன.
இதேபோன்று ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான அரசு விளையாட்டு விடுதிகள் உள்ளன. சில ஊர்களில் அரசு விளையாட்டு பள்ளிகளும் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அரசு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகளுக்கான தேர்வு நேற்று தொடங்கியது.
186 மாணவ-மாணவிகள்
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 164 மாணவர்கள், 22 மாணவிகள் என மொத்தம் 186 பேர் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான தேர்வு, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் 186 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயசித்ரா தலைமையில், உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ் ராஜா மேற்பார்வையில் தேர்வு நடந்தது. மாணவ- மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், ஆக்கி, கபடி, ஹேண்ட்பால், நீச்சல், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் தகுதியான மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள், மாநில அளவில் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்கிறார்கள். அதில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கி படிப்பதற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
Related Tags :
Next Story