திருப்பூரில் 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாநகர் உட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்தப் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து நகர் நல அதிகாரி பூபதி தலைமையில் நான்கு குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகருக்குட்பட்ட 1, 2, 3, 4 ஆகிய மண்டலங்களில் உள்ள பேக்கரிகள் டீ கடைகள் வணிக வளாகங்கள் ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன்படி 1-வது மண்டலத்தில் சுகாதார அதிகாரி முருகன் தலைமையிலும், 2-வது மண்டலத்தில் சுகாதார அதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலும், 3-வது மண்டலத்தில் சுகாதார அதிகாரி பிச்சை தலைமையிலும், 4-வது மண்டலத்தில் சுகாதார அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு உள்ள ஏராளமான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மறைத்து வைத்து பயன்படுத்துவதும், விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதன்படி 4 மண்டலங்களிலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 249 வணிக நிறுவனங்களில் இருந்து 2090 கிலோ பிளாஸ்டிக் பொருட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த நிறுவனங்களுக்கு ரூ.15,500 ஐ அபராதமாக விதித்தனர். தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும் என்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீதும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story