வெள்ளோடு அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு; கண்காணிப்பு கேமராவில் திருடன் உருவம் பதிவானது


வெள்ளோடு அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு; கண்காணிப்பு கேமராவில் திருடன் உருவம் பதிவானது
x
தினத்தந்தி 12 May 2019 4:30 AM IST (Updated: 11 May 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளோடு அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டுப்போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னிமலை,

வெள்ளோடு அருகே உள்ள மயிலாடி முருகன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை தாமோதரன் கடையை திறப்பதற்காக வந்து பார்த்தார்.

அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.2 ஆயிரத்தை காணவில்லை.

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றபிறகு யாரோ மர்மநபர் வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அங்கு சென்று தாமோதரனின் கடை அருகே உள்ள மற்றொரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க திருடன் ஒருவன் கடை உள்ளே ஆயுதத்துடன் நடந்து சென்றது பதிவாகியிருந்தது. அந்த உருவத்தை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story