ஒட்டநத்தம் அருகே வீடு, வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர வாக்கு சேகரிப்பு


ஒட்டநத்தம் அருகே வீடு, வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டநத்தம் அருகே வீடு, வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஓட்டப்பிடாரம், 

ஒட்டநத்தம் அருகே வீடு, வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீடு, வீடாக பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா நேற்று காலையில் ஒட்டநத்தம் அருகே உள்ள முறம்பன், சங்கம்பட்டி, கல்லத்திகிணறு, மலைப்பட்டி, பரிவல்லிகோட்டை, அயிரவன்பட்டி, இளவேலங்கால், ஓணமாக்குளம் ஆகிய கிராமங்களில், முன்னாள் அமைச்சர் ரகுபதி தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தி.மு.க. வேட்பாளரின் சொந்த ஊரான அயிரவன்பட்டி கிராமத்தில் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் வேட்பாளர் சண்முகையா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;-

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார். குறிப்பாக மழை காலங்களில் தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அதனை சீவலப்பேரி அருகே தடுப்பணை அமைத்து அதிலிருந்து கால்வாய் மூலம் ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களில் இணைத்து பாசன வசதி செய்து தரப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும்.

விவசாய கடன்

ஓட்டப்பிடாரத்தை தலைமை இடமாக கொண்டு போக்குவரத்து பணிமனை அமைத்து அனைத்து பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும். அதே போல் நீதிமன்றம் அமைக்கப்படும். விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.தமிழகத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கல்லத்திகிணறு கிராமத்தில் உள்ள சவேரியார் ஆலயம், தூய யோவான் ஆலயம் சென்று வழிபாடு நடத்தினார். இந்த பிரசாரத்தின் போது புதுக்கோட்டை மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் சக்திராமசாமி, பொன் கணேஷ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story