தேவதானப்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் மோதல் -பெண் உள்பட 6 பேர் படுகாயம், 12 பேர் மீது வழக்குப்பதிவு


தேவதானப்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் மோதல் -பெண் உள்பட 6 பேர் படுகாயம், 12 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 11 May 2019 10:15 PM GMT (Updated: 11 May 2019 7:33 PM GMT)

தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகேயுள்ள கெங்குவார்பட்டியில் கடந்த தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கெங்குவார்பட்டி பட்டாளம்மன் சாமி கோவில் திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது செல்லும் வழியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஆனது. அதையொட்டி இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை கட்டுப்படுத்தினர். எனினும் இந்த மோதலில் அழகர் (வயது 40), ராஜகிருஷ்ணன் (31), சீனிவாசன் (28), சதீஸ் (20), பிரகீத் (21) மற்றும் நாகலட்சுமி (42) என்ற பெண் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.அவர் கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த மோதல் தொடர்பாக தேவதானப்பட்டி போலீசார் இருதரப்பை சேர்ந்த தங்கபாண்டி, சுரேஷ், விக்னேஷ், நாகமுத்து, பெத்தண்ணன், சின்னசாமி, பொன்னையா, பாண்டிமூர்த்தி உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story