சாலையின் குறுக்கே பாம்பு சென்றதால் விபரீதம்: அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை சாவு
சாலையின் குறுக்கே சென்ற பாம்பை நசுக்காமல் இருக்க திடீர் ‘பிரேக்’ பிடித்ததால் மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாகச் செத்தார்.
கண்டமங்கலம்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் லெனின் (வயது 25), இவருடைய நண்பர் ரகோத். இவர்கள் இருவரும் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலம் திருக்கனூருக்கு சென்றனர். அவர்களுடன் கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை மணிகண்டன் (25) மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இவர் திருபுவனையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை தேடிச் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அங்குள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே சென்ற போது லெனினுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையின் குறுக்கே திடீரென பாம்பு சென்றதை பார்த்ததும் அதை நசுக்காமல் இருக்க திடீர் ‘பிரேக்’ போட்டார். இதை கவனிக்காததால் அந்த மோட்டார் சைக்கிள் மீது லெனினின் மோட்டார் சைக்கிள் மோதியது. லெனினும், அவரது நண்பர் ரகோத்தும் கீழே விழுந்தனர்.
அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன் லெனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே சரிந்து விழுந்தார். இந்த விபத்தில் லெனினும், ரகோத்தும் லேசான காயமடைந்தனர். ஆனால் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். பலியான மணிகண்டனுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகின்றன. தற்போது அவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த விபத்து குறித்து கண்டமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story