உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 18-ந் தேதி நடக்கிறது
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
திசையன்விளை,
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
உவரி சுயம்புலிங்க சுவாமி
தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பழமையும், பெருமையும் வாய்ந்தது உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இங்கு சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் உச்சிகால பூஜை, அன்னதானம் ஆகியன நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவு தேவார இன்னிசை, ராக்கால பூஜை நடக்கிறது.
வைகாசி விசாகம்
18-ந் தேதி வைகாசி விசாக திருநாளன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறப்பு, உதயமார்த்தாண்ட பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலையில் மங்கள இசை, சாயரட்ச பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.
Related Tags :
Next Story