மாங்காடு அருகே குடும்பத்தகராறு பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மாங்காடு அருகே குடும்பத்தகராறு பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

மாங்காடு அருகே உள்ள கெருகம்பாக்கம், பூமாதேவி நகரை சேர்ந்தவர் வரதன் (வயது 34), இவரது மனைவி சுபஸ்ரீ (30). இவர்களுக்கு சுபிக்சன்(2), என்ற மகனும், பூமிகா என்ற 6 மாத குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அறைக்குள் சென்ற சுபஸ்ரீ நீண்ட நேரமான பின்னரும் வெளியே வரவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த வரதன் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது சுபஸ்ரீ தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுபஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் வரதன் மூட்டு வலி காரணமாக கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை திருப்பதி சென்று வரலாம் என தனது மனைவி சுபஸ்ரீயிடம் கேட்கும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் அறைக்குள் சென்று சுபஸ்ரீ தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Next Story