விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை: லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து பிற பகுதிகளுக்கு விற்பனை செய்வதால் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாய கிணறுகள் அதிகம் உள்ளதால், இதில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பல நாட்களாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து பிற பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் நிலத்தடிநீர் வறண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று காலை தங்கள் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து சென்ற 3 லாரிகளை வேங்கைவாசல் பிரதான சாலையில் சந்தோசபுரம் நடுநிலைப்பள்ளி அருகே சிறை பிடித்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் இப்பகுதியில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்துச்செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. மேலும் சிறைபிடித்த லாரிகளில் இருந்த தண்ணீரை அப்பகுதி மக்களுக்கே வினியோகம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story