கூத்தாநல்லூரில், ரூ.60 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


கூத்தாநல்லூரில், ரூ.60 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூரில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர், 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், வெற்றிவேல் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு கடைகளில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி பணியாளர்கள் அழித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை வினியோகம் செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story