மாம்பழ பாதிப்பு
கோடை காலம் தொடங்கியதுமே மாம்பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கிவிடும். பழக்கடைகளில் மாம்பழங்கள்தான் குவியல் குவியல்களாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு இன்னும் மாம்பழங்கள் வரவில்லை. மாம்பழ விளைச்சல் அதிக அளவில் நடை பெறும் பகுதிகளில் விளைச்சல் குறைந்திருப்பதே அதற்கு காரணம். வறட்சியும், பருவநிலை மாற்றமும் மாம்பழ விளைச்சலை பாதிக்க செய்திருக்கிறது. அதனால் மாம் பழங்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. நாட்டில் வருடாந்திர சராசரி உற்பத்தி அளவைவிட இந்த ஆண்டு 30 சதவீதம் குறைவாக இருக்கும் என்று மாம்பழ விவசாயிகள் கூறுகிறார்கள்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் டன் மாம்பழம் விளையும். ஆனால் இந்த ஆண்டு இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் டன் வரைதான் விளைச்சல் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மாம்பழ உற்பத்தியாளர் சங்கத் தினர் கூறுகிறார்கள். இந்த பகுதிகளில் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்கும். அதற்கு உகந்த காலநிலை அமையாமல் போனதால் மாம்பழ அறுவடையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மாங்காய்கள் காய்க்க தொடங்கிய நேரத்தில் புயல் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் பிஞ்சு மாங்காய்கள் கீழே விழுந்து பெருமளவு சேதமடைந்திருக்கின்றன. அதனால் அவற்றை பழுக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தார்வாட் பகுதியை சேர்ந்த தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராமச்சந்திரா கூறுகையில், ‘‘வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்ததால் மண்ணில் ஈரப்பதத்தின் தன்மை குறைந்துபோய்விட்டது. சூறைக்காற்று வீசியதும் மாம்பழ உற்பத்தியை பாதித்துவிட்டது’’ என்றார்.
Related Tags :
Next Story