வாலாஜாபாத் அருகே சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத் அருகே ஆம்பாக்கம் கிராமத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்ட ஆம்பாக்கம் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் ஒரகடம் பகுதியிலும், வாலாஜாபாத் பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆம்பாக்கம் கிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தட்டுப்பாடு இன்றி எந்த நேரத்திலும் மது கிடைப்பதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் தங்கு தடையின்றி ஆம்பாக்கம் கிராமத்திற்கு வந்து மது வாங்கி குடித்து விட்டு செல்கின்றனர்.
இவ்வாறு மது அருந்தி விட்டு வாகனங்களில் செல்லும்போது விபத்தை ஏற்படுத்துகின்றனர். இதன் காரணமாக கிராமப்பகுதிகளில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. கிராம பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குறித்து அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் மது விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர்களை, மது விற்பனை செய்பவர்கள் மிரட்டி வருகின்றனர்.
எனவே ஆம்பாக்கம் கிராமத்தில் படுஜோராக நடைபெறும் மது விற்பனையை தகுந்த நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story