குந்துகோல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி இன்று பிரசாரம்


குந்துகோல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி இன்று பிரசாரம்
x
தினத்தந்தி 13 May 2019 4:30 AM IST (Updated: 13 May 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

குந்துகோல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார்.

பெங்களூரு, 

குந்துகோல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார்.

குமாரசாமி இன்று பிரசாரம்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில், குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரசுக்கு, ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு அளித்துள்ளது.

அந்த 2 தொகுதிகளிலும் முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்வார் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று (திங்கட்கிழமை) குந்துகோல் தொகுதியில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததால் குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள ரெசார்ட்டில் குமாரசாமி 2 நாட்களாக ஓய்வெடுத்தார். அங்கிருந்து நேற்று இரவு அவர் பெங்களூருவுக்கு திரும்பினார்.

நாளை சிஞ்சோலியில்...

இதையடுத்து, பெங்களூருவில் இருந்து இன்று மதியம் தனி விமானத்தில் முதல்-மந்திரி குமாரசாமி உப்பள்ளி செல்கிறார். பின்னர் மாலையில் குந்துகோலில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவதிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்கிறார். அவருடன், துணை முதல்-மந்திரி பரமேஸ்வரும், காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவும் பிரசாரத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இன்று இரவு உப்பள்ளியில் குமாரசாமி தங்குகிறார்.

நாளை (செவ்வாய்க் கிழமை) உப்பள்ளியில் இருந்து கலபுரகி மாவட்டம் சிஞ்சோலிக்கு முதல்-மந்திரி குமாரசாமி செல்கிறார் நாளை சிஞ்சோலியில் காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் ராத் தோடுவுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.


Next Story