மாவட்ட செய்திகள்

திருவாரூரில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் + "||" + The strike action of the lorry owners in Tiruvarur withdrew

திருவாரூரில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

திருவாரூரில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
திருவாரூரில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,200 லாரிகள் உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கு ரெயில் மூலமும் அனுப்பி வைக்கும் பணிகளில் ஏராளமான லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.


இந்தநிலையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களுடைய அரவை பணிக்காக நெல் மூட்டைகளை தங்களுடைய சொந்த லாரிகளில் ஏற்றி கொள்வதாக கூறி பழைய நடைமுறையை மாற்றினர்.

போராட்டம் வாபஸ்


பழைய நடைமுறையை செயல்படுத்த வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து லாரிகளும் வழக்கம்போல் இயங்கும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் ஓட்டேரியில் குப்பைகளுக்கு தீவைக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வு
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்து உள்ளது.
3. 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடுகோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
4. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில், இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டம்
கோவில் சொத்துகளை மீட்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு
குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...