போலீஸ் குடியிருப்பில் பயங்கர தீ; சிறுமி உடல் கருகி சாவு தாதரில் பரிதாபம்


போலீஸ் குடியிருப்பில் பயங்கர தீ; சிறுமி உடல் கருகி சாவு தாதரில் பரிதாபம்
x
தினத்தந்தி 13 May 2019 5:00 AM IST (Updated: 13 May 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

தாதரில் போலீஸ் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்தாள்.

மும்பை, 

தாதரில் போலீஸ் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்தாள்.

தீ விபத்து

மும்பை தாதர் மேற்கு கோகலே சாலையில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள கட்டிடங்களில் போலீசார் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் போலீஸ் குடியிருப்பு கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குபுகுபுவென கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. அப்போது அந்த வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

சிறுமி பலி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் 5 வாகனங்களில் தீயணைப்பு படை யினர் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த னர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சிறுமி ஒருவள் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தாள்.

போலீசார் அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பலியான சிறுமியின் பெயர் ஸ்ராவனி சவான்(வயது15) என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

தீ விபத்தின் போது சிறுமி மட்டும் தான் வீட்டில் இருந்து இருக்கிறாள். அவளது பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த சிறுமியின் பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி பார்பவர்களை கண்கலங்க செய்தது.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story