முன்பதிவில்லா பெட்டியில் இருக்கையை ஆக்கிரமித்து ரெயில் பயணிகளிடம் பணம் வசூலித்த 4 பேர் கைது
முன்பதிவில்லா பெட்டியில் இருக்கையை ஆக்கிரமித்து ரெயில் பயணிகளிடம் பணம் வசூல் செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
முன்பதிவில்லா பெட்டியில் இருக்கையை ஆக்கிரமித்து ரெயில் பயணிகளிடம் பணம் வசூல் செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பயணிகளிடம் பணம் வசூல்
கோடை விடுமுறையையொட்டி மும்பையில் இருந்து செல்லும் நீண்டதூர ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவில்லா பெட்டிகளில் இருக்க கூட இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணம் செய்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஒரு கும்பல் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா ரெயில் பெட்டியில் இருக்கையை ஆக்கிரமித்து பணவசூலில் ஈடுபட்டு வந்துள்ளது. இவர்கள் முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் ஏறி இடம் பிடிப்பார்கள். பின்னர் தாங்கள் கேட்கும் பணத்தை கொடுப்பவர்களுக்கு அந்த இடத்தை கொடுத்துவிடுவார்கள்.
4 பேர் கைது
அண்மையில் இருக்கை பிடித்து கொடுத்து பணம் வாங்கும் போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் பயணியிடம் தகராறு செய்து உள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், ரபிக் முகமது (வயது24) என்ற வாலிபர் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகளான முகமது சாமிம் அன்சாரி, சாகிர் காஜி, சிக்கந்தர் சாகா ஆகியோரும் பிடிபட்டனர்.
இதையடுத்து போலீசார் ரெயில்களில் இருக்கை பிடித்து கொடுத்து பயணிகளிடம் பணவசூலில் ஈடுபட்டு வந்த அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story