டிக்கெட் பரிசோதகரை தாக்கிய உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
தாதர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
மும்பை,
தாதர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஓசிப்பயணம்
மத்திய ரெயில்வே தாதர் ரெயில் நிலையத்தில் சம் பவத்தன்று தலைமை டிக்கெட் பரிசோதகர் கர்தாம் என்பவர் 6-ம் எண் பிளாட்பாரத்தில் ஓசிப்பயணம் செய்தவர்களை பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது டிக்கெட் இன்றி ரெயிலில் இருந்து இறங்கிய ஒருவரை பிடித்து அவருக்கு அபராதம் விதித்தார்.
ஆனால் அந்த நபர் அபராத தொகையை செலுத்த மறுத்து அவரிடம் வாக்கு வாதம் செய்தார். இதையடுத்து தலைமை டிக்கெட் பரிசோதகர் கர்தாம் அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்.
பணி இடைநீக்கம்
மேலும் அவரை கைது செய்யும்படி போலீசிடம் ஒப்படைத்தார். ஆனால் அங்கு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாவுனிக்கர் அந்த நபரை கைது செய்ய மறுத்து உள்ளார். இதில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கும் டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர், தலைமை டிக்கெட் பரிசோதகரை தாக்கி கீழே தள்ளினார்.
இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாவுனிக்கர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story