எனது வெற்றி நிச்சயம்: ராகுல்காந்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் - வைத்திலிங்கம் பேட்டி

ராகுல்காந்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் எனது வெற்றி நிச்சயம் என்று காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.
புதுச்சேரி,
புதுவை காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டாநகர் மின்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. அதனை பார்வையிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் துறை அதிகாரிகள் செய்த தவறினால் இங்கு மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இது மக்களுக்கு சிரமம் என்றாலும் மகிழ்ச்சியோடு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இங்கு மறுதேர்தல் என்பதால் தேர்தல் துறை அதிகாரிகளும், போலீசாரும் குவிந்திருப்பதால் வாக்குகள் குறைய வாய்ப்பு உள்ளது. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைவிட ராகுல்காந்தி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்.
இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.
இதேபோல் வாக்குச்சாவடியை என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியும் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெங்கட்டாநகர் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. குடிநீரில் உப்பு அதிகமாக உள்ளது என்று கூறினார்கள். அதை நிவர்த்தி செய்து தருவேன் என்று கூறியிருந்தேன்.
எனவே இப்பகுதி மக்கள் என்.ஆர்.காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள். வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடப்பதால் வாக்குப்பதிவு அதிகரிக்கும். நிச்சயமாக என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெறும்.
இவ்வாறு டாக்டர் நாராயணசாமி கூறினார்.

Related Tags :
Next Story