அழைப்பு உங்களுக்குத்தான்...!


அழைப்பு உங்களுக்குத்தான்...!
x
தினத்தந்தி 13 May 2019 11:25 AM IST (Updated: 13 May 2019 11:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டேரியஸ் ஆப் இந்தியா, நெம்மேலி அரசு அறிவியல் கலைக்கல்லூரி கெஸ்ட் லெக்சரர், கணினி மேம்பாட்டு தொழில்நுட்ப மத்திய நிறுவனம் திட்ட மேலாளர், சிண்டிகேட் வங்கி, நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி, சவுத் இந்தியன் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஐ.சி.எஸ்.ஐ.

மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்று, ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டேரியஸ் ஆப் இந்தியா’ ( (ICSI). தற்போது இந்த கல்வி மையத்தில் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களான அட்மின், எக்சிகியூட்டிவ், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 52 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 32 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. அதிகாரி பணிக்கு மட்டும் 55 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்புடன், ஐ.சி.எஸ்.ஐ. உறுப்பினர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.icsi.edu என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு மே 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.


பல்கலைக்கழகம்

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், நெம்மேலி அரசு அறிவியல் கலைக்கல்லூரியில் கெஸ்ட் லெக்சரர் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலை படிப்புடன், நெட், செட், ஸ்லெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, விண்ணப்பப் படிவத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்னை பல்கலைக்கழக முகவரியை சென்றடைய கடைசி நாள் வருகிற 17-ந் தேதியாகும். இதற்கான நேர்காணல் மே 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. விரிவான விவரங்களை http://www.unom.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


கணினி நிறுவனம்

நவீன கணினி மேம்பாட்டு தொழில்நுட்ப மத்திய நிறுவனம் (C-DAC)) திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 62 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 50 வயதுடையவர்கள் திட்ட மேலாளர் பணிக்கும், 37 வயதுக்கு உட்பட்டவர்கள் திட்ட பொறியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக் படித்தவர்கள், எம்.சி.ஏ. படித்தவர்கள், எம்.டெக், எம்.இ., பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரத்தை இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21-ந் தேதியாகும். மேலாளர் பணிக்கு நேர்காணலும், திட்ட பொறியாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலும் நடக்கிறது. ஜூன்1,2-ந் தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. விரிவான விவரங்களை www.cdac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


சிண்டிகேட் வங்கி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், பட்டப் படிப்பு படித்தவர்கள் மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 30 வயதுடையவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், 25 முதல் 35 வயதுடையவர்கள் மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் www.syndicatebank.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே 22-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கவும்.


கோர்ட்டுகள்

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிகளுக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்காலிக பணியிடங்களான இதற்கு பட்டப்படிப்புடன், கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். 14-12-2018 மற்றும் 7-3-2019 அறிவிப்பின்படி விண்ணப்பம் அனுப்பாதவர்கள் மட்டும் இப்போது விண்ணப்பிக்கலாம். வி்ண்ணப்பங்கள் வருகிற 17-ந் தேதிக்குள் மாவட்ட நீதிமன்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை /districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.


வங்கி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணிகளுக்கு 29 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எஸ்சி. பட்ட தாரிகள், எம்.எஸ்சி. அக்ரி படித்தவர்கள், சி.ஏ. படித்தவர்கள், எம்.சி.ஏ., பிஇ., பி.டெக் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள், விரிவான விவரங்களை www.southindianbank.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மே 18-ந்தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
1 More update

Next Story