குண்டர் சட்டத்தில் அருள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வக்கீல்கள் 4 நாட்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு


குண்டர் சட்டத்தில் அருள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வக்கீல்கள் 4 நாட்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு
x
தினத்தந்தி 13 May 2019 10:00 PM GMT (Updated: 13 May 2019 7:39 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை தாங்கினார். இதில் சங்க செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரசியல் கட்சி பிரமுகர் மீது புகார் அளித்த வழக்கறிஞர் அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ள தமிழக அரசின் செயலை வன்மையாக கண்டித்தும், குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் பெரம்பலூரில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது. இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மே 20-ந் தேதி நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story