மழையின்மை-கொளுத்தும் வெயிலால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி குறைந்தது


மழையின்மை-கொளுத்தும் வெயிலால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி குறைந்தது
x
தினத்தந்தி 14 May 2019 3:00 AM IST (Updated: 14 May 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

மழையின்மை மற்றும் கொளுத்தும் வெயிலால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1¼ அடி குறைந்தது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை.

இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இதில் பிரதான அணை பாபநாசம் ஆகும். இந்த அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி ஆகும். நேற்று முன்தினம் இந்த அணையின் நீர்மட்டம் 11.80 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 10.55 அடியாக குறைந்தது. ஒரே நாளில் 1¼ அடி குறைந்தது. அதேபோல் 156 அடி உயரம் கொண்டு சேர்வலாறு அணையில் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரைப்படி 47.51 அடியாக உள்ளது.

மற்றொரு பிரதான அணை மணிமுத்தாறு அணை ஆகும். இந்த அணையில் நீர்மட்டம் 118 அடி ஆகும். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.69 அடியாக உள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, அவ்வப்போது ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story