திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு பொது வினியோக திட்டத்துக்கு 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி, உளுந்து, பச்சை பயறு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடியும், முன்பட்ட குறுவை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சம்பா சாகுபடியில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது.
காட்பாடிக்கு.....
இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவி்னியோக திட்டத்துக்கு பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் 96 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. ரெயில் நிலையத்தில் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 24 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1250 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்கு காட்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story