திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாத கழிப்பறை கட்டிடம்


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாத கழிப்பறை கட்டிடம்
x
தினத்தந்தி 13 May 2019 10:15 PM GMT (Updated: 13 May 2019 8:32 PM GMT)

கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த கழிப்பறை கட்டிடங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது என விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது.

ஆனால் கழிப்பறைகள் பராமரிப்பு இல்லாததால் கடந்த சில மாதங்களாக கட்டிடத்தின் உள்ளேயும், வெளியேயும் புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த கழிப்பறை கட்டிடங்களை பயன்படுத்த முடியாமல் கட்டிடத்தின் பின்புறத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து செல்கின்றனர்.

எனவே திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பயன்பாடு இல்லாமல் புதர்மண்டி கிடக்கும் கழிப்பறை கட்டிடங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story