வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி


வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 14 May 2019 4:15 AM IST (Updated: 14 May 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்காக 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய ஒப்புகை சீட்டு எந்திரம் ஒன்று ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனையொட்டி மொத்தம் 1,068 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 356 ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரங்கள், 356 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், உதவி அலுவலர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மின்னணு எந்திர வல்லுனர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அகர வரிசைப்படி 37 வேட்பாளர்களின் பெயர்களும் மற்றும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் பொருத்தும் பணி தொடங்கி நடந்தது. அதில் பல்வேறு துறை சார்ந்த 80–க்கு மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் யாவும் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கீழ் தளத்தில் உள்ள ஒரு தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மேலும் அந்த அறை மற்றும் தாலுகா அலுவலக நுழைவுவாயில் உள்ளிட்ட சில பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

1 More update

Next Story