சித்தராமையா குறித்து விமர்சனம்: எச்.விஸ்வநாத்துக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கண்டனம்
சித்தராமையா குறித்துவிமர்சித்த எச்.விஸ்வநாத்துக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
ஜனதாதளம் (எஸ்) தலைவர் எச்.விஸ்வநாத், சித்தராமையா ஆட்சி காலத்தை எந்த பெரிய திட்டமும் செயல்படுத்தவில்லை என்று விமர்சித்துள்ளார். இதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத், சித்தராமையா ஆட்சி சிறப்பாக இருக்கவில்லை என்றும், அதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். எச்.விஸ்வநாத்தின் இந்த கருத்தை நான் கண்டிக்கிறேன்.
எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரியாக இருந்தபோது, எச்.விஸ்வநாத் மந்திரியாக செயல்பட்டார். அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி சரியாக செயல்படவில்லை என்று சொல்ல முடியுமா?.
சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று ஆதரவாளர்கள் அன்பாக கூறுகிறார்கள். இதற்கு சித்தராமையா உரிய விளக்கம் கொடுத்துள்ளார். இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Related Tags :
Next Story