மாவட்ட செய்திகள்

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி + "||" + Rahul Gandhi prime ministerial candidate Leaving announced through the backyard Cantiracekarara negotiate with?

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
‘ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா?’ என்று சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.
சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமி ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை, சின்னியம்பாளையம், முத்துகவுண்டன்புதூர், வாகராயம்பாளையம், கிட்டாம்பாளையம் நால் ரோடு, கருமத்தம்பட்டி, சாமளாபுரம், சூலூர் ஆகிய பகுதிகளில் நேற்று திறந்த வேனில் சென்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கந்தசாமியை வெற்றிபெற செய்தால் நீங்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் எங்களின் அரசுக்கு வந்து சேரும். ஆனால் மாற்று வேட்பாளர் வெற்றி பெறமாட்டார். நான் முதல்-அமைச்சராகி 2¼ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் என்னிடம் மனு கொடுத்ததில்லை. இனிமேலும் கொடுக்க மாட்டார்கள். அப்படியிருக்கும் போது இங்கு அவர்கள் வெற்றி பெற்றால் எண்ணிக்கை வேண்டுமானால் கூடும். அதாவது 88-ல் இருந்து 89 ஆக அதிகரிக்கும். வேறு ஒன்றும் நடக்கப்போவது இல்லை.

ஆளுகின்ற கட்சியை சேர்ந்த ஒருவர் வருகிறபோது தான் அந்த பகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நீங்கள் கொடுக்கிற கோரிக்கை மனுவை முறையாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களால் நிறைவேற்ற முடியும்.

இன்று மு.க.ஸ்டாலின் போகும் இடமெல்லாம் பேசுகிறார். தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாக சொல்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் இவர் எப்படி தேர்தல் அறிக்கை வெளியிட முடியும். ஆளுகின்ற கட்சி வெளியிடும் அறிக்கையில் சொல்லியதை தானே நிறைவேற்ற முடியும். அந்த வாய்ப்பு ஆளுகிற கட்சிக்கு தான் இருக்கிறது.

ஆகவே இன்றைக்கு மு.க.ஸ்டாலின் வெளியிடும் அறிவிப்பு பொய்யான அறிவிப்பு தான். கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார். இதை தள்ளுபடி செய்வேன். அதை தள்ளுபடி செய்வேன். இதைக் கொண்டு வருவேன். அதை கொண்டு வருவேன் என்று சொல்கிறார். இது சட்டமன்ற இடைத் தேர்தல். பொதுத் தேர்தலாக இருந்தால் கூட சொல்லலாம். நான் வெற்றிபெற்று வந்தால் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று சொல்லலாம். ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும்போது எதிர்க்கட்சியாக இருக்கும் மு.க.ஸ்டாலின் சொல்கிற அறிவிப்பை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பொய்யான அறிவிப்பு. மக்களை ஏமாற்றும் அறிவிப்பு.

இன்னொருத்தர் வந்திருக்கிறார். அவர் தான் டி.டி.வி. தினகரன். அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர். அவர் வந்து பெரிய தலைவர் போல பேசி விட்டு போகிறார். 10 ஆண்டுகள் அவர் கட்சியிலேயே கிடையாது. அதன்பின்னர் அவரை கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் அவராக சேர்த்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டு ஒரு தலைவர் போல பேசி விட்டு செல்கிறார்.

டி.டி.வி. தினகரன் யார் என்று அடையாளம் காட்டியதே அ.தி.மு.க. தான். இங்கு இருக்கிற தொண்டர்களின் உழைப்பால் அவர் அடையாளம் காட்டப்பட்டார். அவரை வெற்றி பெற வைத்த சின்னம் இரட்டைஇலை சின்னம். ஆனால் அந்த சின்னத்தை முடக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் அவர். இயக்கத்தை உடைக்க வேண்டுமென்று கட்சிக்கு நெருக்கடி கொடுத்தவர் அவர். அதையெல்லாம் தவிடு பொடியாக்கியது இந்த அரசு. அவர் கண்ட கனவு எல்லாம் நனவாகவில்லை. இதனால் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து விட்டார். இந்த கட்சியை உடைக்கவேண்டும் என்று பார்த்தார்.

தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்து இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சதி திட்டத்தை தீட்டியவர் அவர். அவருக்கு உடந்தையாக இருந்தவர் இன்றைய தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி. அவர் 18 எம்.எல்.ஏ.க்களுடன் பிரிந்து சென்றார். ஆனால் அவர் இப்போது தி.மு.க.வுக்கு சென்று விட்டார். ஆனால் இன்று அ.ம.மு.க. என்று ஒரு கட்சியை தொடங்கி அதன் தலைவராகி இருக்கிறார் டி.டி.வி. தினகரன். சூலூர் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை தடுக்க வேண்டும் என்று தான் டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். அ.தி.மு.க.வால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர். இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு காரணமான அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்று நினைக்கிற டி.டி.வி. தினகரனுக்கு வருகிற தேர்தலில் தகுந்த பாடத்தை நீங்கள் புகட்ட வேண்டும்.

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரமுடியும். அதற்கு நானே உதாரணம். தி.மு.க.கவில் வர முடியுமா?. கருணாநிதி, கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின், அதன்பிறகு உதயநிதி. வாரிசு அரசியல் அங்கு நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு ஒரு காலத்தில் உயர்ந்த பதவி நிச்சயம் கிடைக்கும். அத்தகைய சிறப்பான கட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இந்த கட்சியை உடைத்து எப்படியாவது முதல்-அமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று ஸ்டாலின் துடித்தார். மக்களின் ஆதரவுடன் அனைத்தையும் முறியடித்துள்ளோம்.

அந்த எரிச்சலில்தான் ஸ்டாலின் என்னன்னவோ பேசுகிறார். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாத இயக்கம் வெற்றி பெற்றது கிடையாது. மக்களுக்கு நன்மை செய்து வரலாற்றை அ.தி.மு.க. படைத்துக்கொண்டு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கருணாநிதியின் உருவச்சிலையை திறப்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும், அவருடைய தாயார் சோனியா காந்தியும் வந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். அந்த நிகழ்ச்சியில் பல மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொண்டனர். அப்போது ஸ்டாலின் பேசும்போது ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அப்போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்-மந்திரிகளிடம் நிருபர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருப்பது குறித்து கேட்டதற்கு, தேர்தல் முடிந்த பிறகுதான் பிரதமர் யார்? என்று முடிவு செய்வோம் என்று தெரிவித்தனர். நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

ராகுல்காந்தியை பிரதமராக அறிவித்த ஸ்டாலின், அவரை பிரதமராக அறிவிப்பேன் என்று சொல்லிக்கொண்டே கொல்லைப்புற வழியாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவை சந்திப்பது எந்தவிதத்தில் நியாயம்?. 3-வது அணியை அமைத்து பிரதமரை தேர்வு செய்கிறார்களாம். நீங்கள் ஜெயித்தால் தானே 3-வது அணியை அமைக்க முடியும். ஏற்கனவே மக்கள் ஓட்டு போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. 23-ந் தேதி ஓட்டு எண்ணி முடித்தபின்னர் யார் மத்தியில் ஆட்சி அமைப்பது என்று மக்கள் முடிவு செய்வார்கள். முடிவு செய்கின்ற நிலை மக்களிடம் உள்ளது. ஸ்டாலினிடம் அல்ல. ஏற்கனவே தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. ஸ்டாலின் கனவு பலிக்காது. ஏன் என்றால் நீங்கள் மக்களுக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், கே.பாண்டியராஜன், வேட்பாளர் வி.பி.கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது -முதல்வர் பழனிசாமி
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
2. தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
3. மக்களை ஏமாற்றி தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
மக்களை ஏமாற்றி தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. இறுதிக்கட்ட பிரசாரத்தையொட்டி சேலம் கடைவீதிகளில் நடந்து சென்று எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு - பொதுமக்கள், வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார்
சேலம் கடைவீதிகளில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று அ.தி.மு.க.வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள், வியாபாரிகளிடம் அவர் ஆதரவு திரட்டினார்.
5. பட்டாசு தொழிலை பாதுகாப்போம் விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி
பட்டாசு தொழிலை பாதுகாப்போம் என விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.