வானூர் அருகே, பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வானூர் அருகே, பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2019 3:30 AM IST (Updated: 15 May 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா எறையானூர் முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் கன்னியப்பன் (வயது 55). இவர் திண்டிவனம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கடலூர் திருவந்திபுரம் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு முடித்த பின்னர் இரவில் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு கன்னியப்பன் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை. கன்னியப்பன் திருவந்திபுரம் கோவிலுக்கு சென்றதை அறிந்து யாரோ மர்ம மனிதர்கள் அவரது வீட்டில் புகுந்து நகைகளை திருடிச்சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்தில் கன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story