மாவட்ட செய்திகள்

கம்பத்தில், காதல் தோல்வியால் தொழிலாளி தற்கொலை + "||" + At the Kambam, love fails Worker suicide

கம்பத்தில், காதல் தோல்வியால் தொழிலாளி தற்கொலை

கம்பத்தில், காதல் தோல்வியால் தொழிலாளி தற்கொலை
கம்பத்தில், காதல் தோல்வியால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்,

கம்பம் நந்தனார் காலனியை சேர்ந்தவர் சிவா. அவருடைய மகன் வினோத்குமார் (வயது 21). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது அதே மில்லில் வேலை செய்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோரிடம் வினோத்குமார் பெண் கேட்டார். ஆனால் அவருக்கு திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் பெற்றோர் மறுத்து விட்டனர். இதற்கிடையே வினோத்குமார் வேலையில் இருந்து விலகி கம்பத்துக்கு வந்து விட்டார். தான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வீட்டில் யாருடனும் பேசாமல் அவர் இருந்ததாக தெரிகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் வீட்டை விட்டு வினோத்குமார் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று நந்தனார் காலனியில் உள்ள புளியமரத்தில் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிள்ளை அருகே, தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை - மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு
கிள்ளை அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. காதல் தோல்வியால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே காதல் தோல்வியால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
3. காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..
* ‘கல்லூரியில் மூன்று வருடங்கள் எப்படி கடந்துபோனது என்றே தெரியவில்லை. சக மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் எங்கள் காதலை பார்த்து வியந்தார்கள்.
4. கடன் பிரச்சினையால் தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை - நெல்லிக்குப்பம் அருகே பரிதாபம்
நெல்லிக்குப்பம் அருகே கடன் பிரச்சினையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. தற்கொலை செய்த தொழிலாளி அடையாளம் தெரிந்தது, குழந்தை இல்லாததால் மனைவி வேறு திருமணம் செய்ய வேண்டி விபரீத முடிவு
சேந்தமங்கலம் அருகே தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி அடையாளம் தெரிந்தது. குழந்தை இல்லாததால் மனைவி 2-வது திருமணம் செய்து கொள்ள வேண்டி இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...