பேரளத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


பேரளத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 15 May 2019 4:00 AM IST (Updated: 15 May 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

பேரளத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சம்பா பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அரவை செய்யப்பட்டு அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொதுவினியோக திட்டத்துக்காக பல மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

1,250 டன் அரிசி

நேற்று திருவாரூர், குடவாசல், ஆலங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர்.

இதைத்தொடர்ந்து 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,250 டன் அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்துக்கு பேரளத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1 More update

Next Story