மாவட்ட செய்திகள்

முறைகேடு புகார்: பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார்கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் + "||" + Abuse Report: Dismissal of Staff Officer in Parakalakottai Public Officer

முறைகேடு புகார்: பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார்கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

முறைகேடு புகார்: பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார்கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
முறைகேடு புகார் எதிரொலியாக பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார்கோவில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தர விட்டுள்ளார்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை. இங்குள்ள பொதுஆவுடையார்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலின் செயல் அலுவலராக சம்பத்குமார் பணியாற்றி வந்தார்.

இவர் உரிய அனுமதியின்றி செலவு செய்ததாகவும், அதற்கு உரிய கணக்கு தாக்கல் செய்யாமல் முறைகேடு செய்ததாகவும், இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பத்குமாரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் தஞ்சை இணை ஆணையர் தென்னரசு கூறுகையில், “பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவில் செயல் அலுவலர் சம்பத்குமார் மீது முறைகேடு புகார்கள் வந்தன. அதன் பேரில் விசாரணை நடத்தினோம். இதில் முறைகேடு தொடர்பான முகாந்திரம் இருந்ததை தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினோம். இதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்”என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கவலைப்படவில்லை - மகேஷ்பூபதி
இந்திய டென்னிஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை நினைத்து கவலைப்படவில்லை என்று முன்னாள் வீரர் மகேஷ்பூபதி தெரிவித்தார்.
2. ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கம்
ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
3. வலைத்தள புகைப்படங்கள் நீக்கம் - நடிகை கஸ்தூரி எதிர்ப்பு
வலைத்தள புகைப்படங்களை நீக்கத்திற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.
5. சரியாக விளையாடாத ஆத்திரத்தில் காயம் ஏற்படுத்தி கொண்ட மர்க்ராம் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கம்
சரியாக விளையாடாத ஆத்திரத்தில் காயம் ஏற்படுத்தி கொண்ட பேட்ஸ்மேன் மர்க்ராம் இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.