ஓட்டு எண்ணிக்கை குறித்து திருவள்ளூரில் அதிகாரிகளுக்கு பயிற்சி


ஓட்டு எண்ணிக்கை குறித்து திருவள்ளூரில் அதிகாரிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 15 May 2019 2:38 AM IST (Updated: 15 May 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி ஓட்டுகளை எண்ணுவதற்கான பயிற்சி நடந்தது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி ஓட்டுகளை எண்ணுவதற்கான பயிற்சி நடந்தது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். இந்த பயிற்சி மேற்பார்வையாளர், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு நடத்தப்பட்டது.

பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜகோபால், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story