மாவட்ட செய்திகள்

விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு: துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Oil pipes on land Oppressive to protest: farmers demonstrated in the underworld

விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு: துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு: துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர்,

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி துவாக்குடி அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கிற்கு குழாய்கள் வழியாக எண்ணெய் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கும் பணி பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.


இதற்காக துவாக்குடி அருகே உள்ள மேலமாங்காவனம், திருநெடுங்களம், வாழவந்தான் கோட்டை பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள்அமைக்க அந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்ப சென்று விட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், இதனை கைவிடக்கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் துவாக்குடி பஸ் நிலையத்தில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

இதில், விவசாய சங்க மாநில துணைத்தலைவர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் சிதம்பரம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.68 கோடியில் கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டுக்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
எருக்கூரில் ரூ.68 கோடியில் கட்டப்பட்ட நவீன தானியங்கி நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டுக்கு வருமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
2. செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டம்
செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘தற்கொலை செய்து கொள்வோம்’ என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில், குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.