மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை தொடங்கியது + "||" + Krishnagiri began to audit the school and college vehicles in Armedabad Maidan

கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை தொடங்கியது

கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை தொடங்கியது
கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதான வளாகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை தொடங்கியது. அப்போது 17 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு சிறப்பு விதிகள் 2012-ன்படி தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் 732 உள்ளது. இந்த வாகனங்களை தணிக்கை செய்யும் பணி 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது.


அதன்படி முதல் கட்டமாக கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதான வளாகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களின் தர நிலை குறித்து கண்டறியும் ஆய்வு நேற்று தொடங்கியது. வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் வாகன ஆய்வு குழுவினர் பள்ளி, கல்லூரி வாகனங்களை பார்வையிட்டு தணிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது:-

தகுதி சான்று ரத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் 732 உள்ளன. இம்மாதம் (மே மாதம்) இறுதி வரை 4 கட்டங்களாக வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது வாகனங்களின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களான முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, படிகட்டுகளின் அளவு, அவசர கால வழி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஓட்டுனர் இருக்கை, மோட்டார் வாகன விதிகள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி, தொலைபேசி எண்கள், பள்ளியின் பெயர், வாகனத்தை சுற்றி பாதுகாப்பு வளையம், மாணவ, மாணவிகள் இருக்கை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதனிடையே நேற்று 238 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 17 பஸ்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் போது பள்ளி நிர்வாகத்திடம் உடனடியாக தகவல் தெரிவித்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வாகன ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தணிக்கையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கர்ராஜ், பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன், தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏரிகள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு
ஆயிஏரி ஆகிய ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தும் பணி மற்றும் தூர்வாரும் பணிகள், வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. மழைநீர் சேகரிப்பு பணிகளை அதிகாரி ஆய்வு
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர்ந்துபோன ஆழ்துளை கிணற்றின் அருகே மழைநீர் சேகரிப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடக்கிறது.
3. சிவகாசி காமராஜர் சிலை பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
சிவகாசி காமராஜர் சிலை பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
4. தேசிய சுகாதார திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? அரசு மருத்துவமனைகளில் ஆய்வு
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தேசிய சுகாதார திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடக்கிறது.
5. குமரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 37,950 பேர் எழுதினர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு
குமரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 37,950 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...