மாநகராட்சி ஆஸ்பத்திரியில் பெண் கற்பழிப்பு தாராவியை சேர்ந்த வாலிபர் கைது


மாநகராட்சி ஆஸ்பத்திரியில் பெண் கற்பழிப்பு தாராவியை சேர்ந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 May 2019 3:42 AM IST (Updated: 15 May 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

சயான் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் பெண்ணை கற்பழித்த தாராவியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை சயானில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியை 37 வயது பெண் ஒருவர் கூட இருந்து கவனித்து வந்தார்.

இந்தநிலையில் அந்த ஆஸ்பத்திரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஏதோ வேலை விஷயமாக வந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணுக்கு அறிமுகமானார். அப்போது, வாலிபர் அந்த பெண்ணிடம் உங்கள் சகோதரிக்கான மருத்துவ கட்டணத்தில் சலுகை பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

மேலும் தன்னிடம் இருந்த ஒரு விண்ணப்ப படிவத்தை அவரிடம் கொடுத்து நிரப்பி தருமாறு தெரிவித்தார்.

கற்பழிப்பு

இதற்கு அந்த பெண் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என கூறினார். இதையடுத்து அந்த வாலிபர் கட்டண சலுகை பெற்று தருவதாக கூறி 5-வது மாடியில் உள்ள கட்டணம் செலுத்தும் கவுண்ட்டருக்கு அந்த பெண்ணை அழைத்தார். இதை நம்பிய அந்த பெண்ணும் அவருடன் 5-வது மாடிக்கு சென்றார்.

இந்தநிலையில் வாலிபர் மாடிப்படியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த பெண்ணை கற்பழித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து சயான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வாலிபர் கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், பெண்ணை கற்பழித்த வாலிபர் தாராவி பகுதியை சேர்ந்த தீபக் அன்னப்பா குஞ்சிகுர்வே(வயது31) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story