மாவட்ட செய்திகள்

கடலூரில் சுட்டெரித்த வெயில், அனல் காற்றுவீசியதால் பொதுமக்கள் அவதி + "||" + In Cuddalore Burned sunlight, Thermal airs Public Awadhi

கடலூரில் சுட்டெரித்த வெயில், அனல் காற்றுவீசியதால் பொதுமக்கள் அவதி

கடலூரில் சுட்டெரித்த வெயில்,  அனல் காற்றுவீசியதால் பொதுமக்கள் அவதி
கடலூரில் வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கடலூர்,

கோடைக்காலம் என்றால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். நாடு முழுவதும் கோடை கால வெயிலானது இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது.

அதற்கு ஏற்றார்போல் கடலூரில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. அக்கினி நட்சத்திரம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கத்தொடங்கியது. அக்கினி நட்சத்திரம் தொடங்கியது முதல் இதுவரை உள்ள காலத்தில் கடலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயில் பதிவானது.

வழக்கம்போல் நேற்று காலையில் சூரியன் உதயமாகி ஒளி உடலில் பட்டதும் சுள்ளென சுடுவதை உணர முடிந்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வெயிலின் கொடுமையை தாக்கு பிடிக்க முடியாமல் பாதசாரிகள் கையில் குடைபிடித்து கொண்டும், தலையில் துணியால் போர்த்திக்கொண்டும் சென்றதை பார்க்க முடிந்தது. இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள், தங்களது முகத்தை துணியால் மூடிக்கொண்டு சென்றதை காணமுடிந்தது.

கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ராட்சத குடையை நாட்டி வைத்தும், சிலர் தலையில் துணியால் போர்த்திக்கொண்டும் வியாபாரம் செய்தனர்.

மதியவேளையில் அனல் காற்று வீசியதால் வாகனங்களில் சென்ற பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை நீர் வடிந்து உடுத்தி இருந்த ஆடைகளை நனைய செய்ததோடு தாகத்தை வருத்தியது. இதனால் நீர்-மோர், பழச்சாறு, சாத்துக்குடி ஜூஸ், கரும்பு சாறு, பதனீர், இளநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நுங்கு மற்றும் பழங்களை வாங்கி சாப்பிட்டும் தாகத்தை தணித்துக்கொண்டனர்.

அக்கினி நட்சத்திரம் முடிவடைய இன்னும் 13 நாட்கள் உள்ளன. அதுவரை வெயிலின் தாக்கத்தை சமாளிக் வேண்டும் என்பதால் வசதி படைத்த சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடைவாழ் இடங்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர். பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலின் உக்கிரம் தணிய வேண்டும் என்றால் வருண பகவான்தான் கருணை காட்ட வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் பலத்த மழை, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
கோவையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
2. 6 மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி
வில்லூர் கிராமத்தில் 6 மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
3. கோடை காலம் முடிந்த பின்னரும் நெல்லையை வாட்டிவதைக்கும் வெயில் - பொதுமக்கள் கடும் அவதி
கோடை காலம் முடிந்த பின்னரும் நெல்லையை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
4. ராமநாதபுரம் நகரில் 12 மணி நேரம் மின்தடை; பொதுமக்கள் அவதி
ராமநாதபுரம் நகரில் அடுத்தடுத்து உயர்மின்கம்பத்தில் மின்சாரத்தை கடத்தும் பீங்கான் வெடித்து சிதறியதால் இரவில் தொடங்கி 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
5. இருளஞ்சேரி ஊராட்சியில் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கும் மழைநீர் பொதுமக்கள் அவதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மழை பெய்தது. வரத்து கால்வாய் அடைப்பால் மழை நீர் அனைத்தும் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கிறது.