மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மஹிந்திரா டி.யு.வி.300
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது டி.யு.வி.300 மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகம் செய்துள்ளது
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது டி.யு.வி.300 மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.38 லட்சமாகும். புதிய கிரில் முன்பக்க அமைப்பு, ஸ்மோக்டு முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் விளக்கு (டி.ஆர்.எல்.), ஸ்கிட் பிளேட், துல்லியமாக தெரியும் பின்புற விளக்கு, எக்ஸ் வடிவிலான பின்புற ஸ்பேர் சக்கர கவர் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.
இதில் ஏ.பி.எஸ். (ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்), ரியர் பார்க்கிங் சென்சார், முன்புறத்தில் 2 ஏர் பேக்குகள் ஆகியன இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும். சீட் பெல்ட் எச்சரிக்கை, வேகக்கட்டுப்பாட்டு எச்சரிக்கை ஆகியன மேம்படுத்தப்பட்ட மாடலின் சிறப்பு அம்சமாகும்.
100 ஹெச்.பி. திறன், 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் கிடையாது. 5 கியர்களுடன் மானுவல் கியர் பாக்ஸை கொண்டுள்ளது. இதில் 5 மாடல்கள் உள்ளன. இதில் பிரீமியம் மாடலின் விலை ரூ.10.17 லட்சமாக உள்ளது.
Related Tags :
Next Story