வானவில் : ஹீரோ மாஸ்ட்ரோ எட்ஜ்
ஹீரோ நிறுவனம் மோட்டார் சைக்கிள்களைத் தொடர்ந்து தற்போது மொபெட்டுகளில் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ நிறுவனம் மோட்டார் சைக்கிள்களைத் தொடர்ந்து மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலை அறிமுகம் செய்துள்ளது. 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் மாஸ்ட்ரோ எட்ஜ் 125 காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிறுவனம் ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு இந்த மாடலை சந்தையில் அறிமுகம் செய்கிறது.
இந்நிறுவனத்தின் முந்தைய மாடலான டெஸ்டினி 125 மாடலானது 30 வயதுக்கு மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டது. ஆனால் மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலோ முழுக்க முழுக்க இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 110 சி.சி.யில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ள மாஸ்ட்ரோ எட்ஜ் மாடலை விட இது மேம்பட்டது.
இந்த மாடலில் பெட்ரோல் டேங்க் பின் பகுதியில் உள்ளது. டிஜிட்டல் அனலாக், சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர் ஆகியன இதில் உள்ளன. ஹீரோ நிறுவனத்தின் ஸ்டார்ட்ஸ்டாப் (ஐ.3எஸ்.) வசதி இதிலும் உள்ளது. தேவைப்பட்டால் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வசதியை பெறலாம்.
இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே சந்தையில் உள்ள ஹோண்டா கிரேஸியா, டி.வி.எஸ். என்டார்க் 125 ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story