பி.எம்.டபிள்யூ.இஸட்4 ரோட்ஸ்டர், 7 சீரிஸ் பிளக் அன்ட் ஹைபிரிட் அறிமுகம்
சொகுசு கார்களை தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது இஸட் 4 ரோட்ஸ்டர் எனும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
2 வகையான என்ஜினைக் கொண்ட இரு மாடல்கள் வந்துள்ளன. முதலாவது பி.எம்.டபிள்யூ. இஸட் 4. எஸ். டிரைவ் 2.ஓ.ஐ. (விலை ரூ.64,90,000) எனும் ஒரு மாடலும் பி.எம்.டபிள்யூ.இஸட்4.எம்4.ஓ.ஐ. (ரூ.78,90,000) எனும் மற்றொரு மாடலும் வந்துள்ளன.
ஸ்போர்ட் மாடல் காராக வந்துள்ள இந்தக் காரின் மேற்கூரை திறந்து மூடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொத்தானை அழுத்தினால் 10 வினாடிகளில் இது மூடிக்கொள்ளும். இதன் சீட்டைகூட அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். அதுவும் பொத்தானை அழுத்தினால் போதுமானது. இதுவும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருவர் பயணிக்கும் வகையில் மேற்கூரை தேவைக்கேற்ப திறந்து மூடும் வகையில் (கன்வெர்டிபிள் மாடல்) இது வந்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முன்பகுதி, பக்கவாட்டுப் பகுதிகளில் ஏர் பேக் விரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.எஸ். வசதி உள்ளது. இதனால் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். கோடீஸ்வரர்களுக்கும், கார் பந்தய பிரியர்களுக்கும் ஏற்ற கார் இது.
7 சீரிஸ் பிளக் அன்ட் ஹைபிரிட்: பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடலில் பிளக் இன் ஹைபிரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் 745 எல்.இ. பிளக் இன் ஹைபிரிட் என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன.
இது முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்டு முழு காராக இறக்குமதி செய்யப்படுகிறது. பின் சக்கரங்களுக்கான ஸ்டீரிங் வசதி அல்லது பி.எம்.டபிள்யூ.வின் விசேஷ வடிவமைப்பான இன்டக்ரெல் ஆக்டிவ் ஸ்டீரிங் வசதியோடு வந்துள்ளது. இது 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. 286 ஹெச்.பி. திறனும் 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. பின் இருக்கையின் அடிப்பகுதியில் 12 கிலோவாட் பேட்டரி உள்ளது.
எலெக்ட்ரிக் மோட் வசதியை தேர்வு செய்தால் மட்டுமே பேட்டரியிலிருந்து கார் இயக்கத்துக்கான மின்சாரம் கிடைக்கும். 55 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 110 கி.மீ. வேகம் வரை பேட்டரி இயக்கத்திலும் செல்ல முடியும். இதில் மிகச் சிறப்பான ஆடியோ சிஸ்டம் உள்ளது. பிரீமியம் மாடலாக அறிமுகமாக உள்ள இந்த காரின் விலை ரூ.1.5 கோடி இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story