மாவட்ட செய்திகள்

வானவில் : பிலிப்ஸ் கிரில் ஓவன் + "||" + Leading in the preparation of home appliances

வானவில் : பிலிப்ஸ் கிரில் ஓவன்

வானவில் : பிலிப்ஸ் கிரில் ஓவன்
வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிலிப்ஸ் நிறுவனம் முதல் முறையாக ஓவன் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
புதிய தயாரிப்பு ஓவன் டோஸ்டர் கிரில்லர். இது பிலிப்ஸ் ஹெச்.டி.6975 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இதில் ஆப்டி டெம்ப்ரேச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உணவுப் பொருளின் மீது சீரான வெப்பம் பரவ உதவுகிறது. இந்த மைக்ரோவேவ் ஓவனில் உணவு பொருட்களை தயாரிப்பதற்கு என குறிப்புகள் சேமிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 50 வெவ்வேறு வகையான உணவுகளை மொறுமொறுவென சுவையாக அதேசமயம் உணவில் உள்ள புரத சத்துகள் அழியாமல் சமைத்து சாப்பிட முடியும். இதன் விலை ரூ.8,095 ஆகும். இது 1,500 வாட்ஸ் மின்சக்தி கொண்டது. இதன் மூலம் வெளியாகும் வெப்பம் உணவை எளிதில் சமைக்கிறது. அத்துடன் இதனுள் பிரகாசமான வெளிச்சம் இருப்பதால் உணவுப் பொருள் தயாராவதை பார்க்க முடியும். இதன் முன்பகுதி கடினமான கண்ணாடி கதவுகளை கொண்டுள்ளது. அத்துடன் உள்பகுதியில் உறுதியான உலோக பாகங்கள் இருக்கின்றன. இவற்றை எளிதில் சுத்தப்படுத்த முடியும். இது 25 லிட்டர் அளவிலானது. இது சிறிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்குத் தேவையான உணவுப் பொருளை சமைக்கலாம்.

குக்கிங் டிரே, கிரம்ப் டிரே, வயர் கிரில் கம் பார்பிகியூ செட்டுடன் வந்துள்ளது. இதன் மூலம் தேவையான உணவுப் பொருட்களை சமைத்துக்கொள்ளலாம். வெப்பநிலையை நிர்ணயிப்பதற்கு டிஜிட்டல் டிஸ்பிளேயும் உள்ளது. வீட்டிலேயே பீட்ஸா, பார்பிகியூ போன்றவைகளையும் எளிதில் சமைக்க இது உதவுகிறது.


அதிகம் வாசிக்கப்பட்டவை